இஸ்ரேல் தூதரகம் அருகே ஆயுதங்களுடன் நடமாடிய நபர்; பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி

இஸ்ரேல் தூதரகம் அருகே ஆயுதங்களுடன் நடமாடிய நபர்; பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி

ஜெர்மனியின் முனிச் நகரில் இஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. தூதரகம் அருகில் துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களுடன் நபரொருவர் நடமாடியுள்ளார்.

இதனைக் கண்டு சந்தேகமடைந்த பொலிஸார் அவரை தடுத்து விசாரணை நடத்த முற்படுகையில் அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

பொலிஸாரும் அவரை நோக்கி சுட்டதில் சம்பவ இடத்திலேயே அந் நபர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் 18 வயதான இளைஞராவார்.

1972ஆம் ஆண்டில் மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது இஸ்ரேல் விளையாட்டு வீரர்களும் பலஸ்தீன ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 52ஆவது ஆண்டு தினத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் துணைத் தூதரகத்தை தாக்கும் நோக்கிலேயே அவ் இளைஞர் வந்திருக்கலாம் எனவும் இது தற்செயலான நிகழ்வு அல்ல எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This