ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி; ஆதரவை மீளப் பெற்ற முக்கிய கட்சி

ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி; ஆதரவை மீளப் பெற்ற முக்கிய கட்சி

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கான ஆதரவை புதிய ஜனநாயகக் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. இதனால் தீர்மானங்களை நிறைவேற்ற வேறு கட்சிகளின் ஆதரவை நாடும் நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான, சிறுபான்மை லிபரல் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

இங்கு கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் சீக்கியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜக்மீத் சிங் தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி செயல்படுகிறது. இந்த கட்சிக்கு 24 எம்.பிக்கள் உள்ளனர். இவ்வளவு காலமாக ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது.

சீக்கியர்களின் ஆதரவை பெறவும், அந்தக் கட்சித்தலைவர்களை மகிழ்விக்கவும், அவ்வப்போது அவர்களுக்கு ஆதரவாக ட்ரூடோ பேசுவது வழக்கம். பயங்கரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், புதிய ஜனநாயகக் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளது. சீக்கிய தலைவர் ஜக்மீத் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

அரசியலில் கவனம் செலுத்துவதை விட, கடந்த ஆண்டுகளில் நாங்கள் செய்தது போல், கனடியர்களுக்கு ஆதரவாக இருப்பதில் புதிய ஜனநாயகக் கட்சி கவனம் செலுத்தும் என்று நான் நம்புகிறேன்.

2022ல் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய உள்ளேன். தற்போதைய சூழலில் ஜஸ்டின் ட்ரூடோவால் எதிர்கட்சியான கன்சர்வேடிவ்களை எதிர்கொள்ள முடியவில்லை.

2025 அக்டோபர் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் எளிதில் வெற்றி பெறுவார்கள். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் வாபஸ் பெறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சிக்கு ஆபத்தா?

இதனால் ட்ரூடோ எதிர்பாராத அடியை சந்தித்தார். எனினும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

பட்ஜெட்டை நிறைவேற்றவும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உதிரிக்கட்சிகளின் ஆதரவை ஜஸ்டின் ட்ரூடோ அரசு பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
Share This