‘மத தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’; பாப்பரசர் பிரான்சிஸ் இந்தோனேசியாவில் வலியுறுத்து

‘மத தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’; பாப்பரசர் பிரான்சிஸ் இந்தோனேசியாவில் வலியுறுத்து

மத சுதந்திரத்தை மதித்து, இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், மத தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

87 வயதான போப் பிரான்சிஸ், இந்தோனேசிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி யோகோ விடோடோவிடம் இருந்து புனித பாப்பரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்போது அவர்களிடையே கலந்துரையாடலும் இடம்பெற்றது. மத ஒற்றுமைக்கான தேவை உள்ளது என்றும், மத தீவிரவாதம் உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் புனித பாப்பரசர் இதன்போது தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடி குறித்து போப் மற்றும் அதிபர் விடோடோ இடையே நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடிக்கு இருதரப்பு தீர்வு தேவை என்று இந்தோனேசியா பாப்பரசரிடம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This