ஊரடங்கை நீடித்தது பங்களாதேஸ் அரசாங்கம்- இணையச்சேவைகள் முடக்கம்

ஊரடங்கை நீடித்தது பங்களாதேஸ் அரசாங்கம்- இணையச்சேவைகள் முடக்கம்

பங்களாதேசில் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தையடுத்து மூண்ட வன்முறை காரணமாக 120க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவினை நீடித்துள்ளது.

தலைநகர் டாக்காவில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.டாக்காவில் அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டினை எதிர்க்கும் மாணவர்களிற்கும் அரசாங்க ஆதரவாளர்களிற்கும் இடையில் மூண்ட மோதல்கள் பெரும் வன்முறையாக மாறிஉயிர்ச்சேதங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை முதல் இணைய குறுஞ்செய்திசேவைகள் பங்களாதேசில் முடக்கப்பட்டுள்ளன.

வெள்ளிகிழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இரண்டு மணிநேரம் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் அமுலிற்கு வந்துள்ளது . ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

CATEGORIES
Share This