வடகொரியாவில் திரைப்படங்களை பார்த்த இளைஞருக்கு மரண தண்டனை

வடகொரியாவில் திரைப்படங்களை பார்த்த இளைஞருக்கு மரண தண்டனை

அரசின் கட்டுப்பாடுகளை மீறி, தென் கொரியாவின் கே-பாப் இசையை கேட்டதற்காகவும், தென் கொரிய திரைப்படங்களை பார்த்ததற்காகவும் வடகொரியாவின் 22 வயது இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஹவாங்கே மாகாணத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் 2022-ம் ஆண்டு 70 தென் கொரியப் பாடல்களைக் கேட்டதாகவும், மூன்று திரைப்படங்களைப் பார்த்ததாகவும் மற்றும் அவற்றைப் பகிர்ந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வாதிகார ஆட்சி இடம்பெறும் வட கொரியாவில் அரசுக்கு எதிராகவோ, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராகவோ எவரும் எந்தவொரு செயலிலும் ஈடுபட முடியாது.

அந்த அளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கொடூர தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன.

வட கொரியா மீது மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This