சுனிதா வில்லியம்ஸின் ஸ்டார்லைனரில் இருந்து வரும் மர்ம ஒலி: ஆதாரத்தை வெளிப்படுத்தியது நாசா

சுனிதா வில்லியம்ஸின் ஸ்டார்லைனரில் இருந்து வரும் மர்ம ஒலி: ஆதாரத்தை வெளிப்படுத்தியது நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் தெரிவித்த மர்மமான “சோனார் போன்ற” ஒலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வில்மோர் தெரிவித்த வினோதமான ஒலி, குரல் மூலமான (Audio) பின்னூட்டத்தில் இருந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் உள்ள ஸ்பீக்கரிலிருந்து வெளிப்பட்ட சத்தங்கள், பரவலான ஊகங்களையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளி நிலையத்திற்கும் ஸ்டார்லைனருக்கும் இடையிலான ஆடியோ உள்ளமைவு சிக்கலின் விளைவாக அசாதாரண ஒலிகள் ஏற்பட்டதாக நாசாவின் வணிகக் குழு திட்டம் விளக்கமளித்துள்ளது.

பல விண்கலங்கள் மற்றும் தொகுதிகளை ஒன்றோடொன்று இணைக்கும் சர்வதேச விண்வெளி நிலைய ஆடியோ அமைப்பின் சிக்கலான தன்மை காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று நிறுவனம் வலியுறுத்தியது.

“விண்வெளி நிலைய ஆடியோ அமைப்பு சிக்கலானது, பல விண்கலங்கள் மற்றும் தொகுதிகள் ஒன்றோடொன்று இணைக்க அனுமதிக்கிறது, மேலும் இதுபோன்ற சத்தங்கள் பொதுவானது” என்று நாசா கூறியுள்ளது.

நிலையான இயக்க நடைமுறைகளின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்கள் ஏதேனும் அசாதாரண ஒலிகளை கட்டுப்பாட்டு நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வழக்கமாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கியமாக, வில்மோர் தெரிவித்த கருத்து, பணியாளர்கள், ஸ்டார்லைனர் அல்லது நிலைய செயல்பாடுகளுக்கு எந்த தொழில்நுட்ப அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று நாசா உறுதியளித்தது.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடக்கத்தில் ஸ்டார்லைனரின் சிக்கலான வரலாற்றின் காரணமாக கவலைகளை ஏற்படுத்தியிருந்தது.

விண்வெளி வீரர்களான வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் திட்டமிட்ட எட்டு நாள் பயணத்திற்குப் பதிலாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டுள்ளது. தொழில்நுட்ப சிக்கல்களும் இதில் அடங்கியுள்ளது.

இருப்பினும், நாசாவின் விரைவான விளக்கம் விண்கலத்தில் ஏதேனும் புதிய சிக்கல்கள் ஏற்படுமா என்ற அச்சத்தைப் போக்கியுள்ளது.

ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்குத் தயாராகும் போது, ​​நாசா அனைத்து அம்சங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This