தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற இரட்டை யானைக் குட்டிகள்: அரிய நிகழ்வு!

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற இரட்டை யானைக் குட்டிகள்: அரிய நிகழ்வு!

மத்திய தாய்லாந்தில் உள்ள ஆசிய யானை ஒன்று இரட்டை யானை குட்டிகளை ஈன்றுள்ளது. இது ஒரு அதிசயம் என அயுத்தயா யானைகள் சரணாலயத்தின் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 36 வயதான ‘சாம்சூரி’ எனும் யானை எதிர்பார்க்காத வகையில் ஆண் யானை குட்டியை ஈன்றது. அப்போது, அயுத்தயா யானைகள் சரணாலய பராமரிப்பாளர்கள் பிரசவம் முடிந்துவிட்டதாக நினைத்தனர்.

பின்னர், ஈன்ற ஆண் யானை குட்டியை சுத்தம் செய்து அது நிற்பதற்கு உதவி செய்யும் போது, சாம்சூரி இரண்டாவது பெண் யானை குட்டியை ஈன்றுள்ளதாக பலத்த சத்தததை கேட்டு உணர்ந்தனர்.

இந்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

யானைப் பிறப்புகளில் ஒரு சதவீதத்தில் மட்டுமே இரட்டை யானை குட்டிகள் பிறக்கின்றன. மேலும் ஆண் மற்றும் பெண் யானை குட்டிகள் பிறப்பது மிகவும் அரிதான நிகழ்வு என சேவ் தி எலிஃபண்ட்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This