ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெறுவது உறுதி: கணித ரீதியான ஆய்வு
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவே வெற்றி பெறும் வேட்பாளராக இருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
சஜித் எப்படி வெற்றி பெறுவார் என கணித ரீதியாக ஆய்வு நடத்தி விளக்கமளித்துள்ள டளஸ் அழகப்பெரும,
”இம்முறை 171 இலட்சம் வாக்குகள் உள்ளன. அவற்றில் 11 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர்.
இலங்கையில் 82 வீதமான வாக்குகளே இதுவரை பதிவாகியுள்ள அதிகமான வாக்கு வீதமாக உள்ளதால் இம்முறைல் 140 இலட்சம் வாக்குகள் தேர்தலில் பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதில் 50 வீதம் வாக்கை பெற்று வெற்றிபெற 70 இலட்சம் வாக்குகளை பெற வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 249,000 ஆகும். அவ்வாறெனின் அவர் மேலும் 67 இலட்சம் வாக்குகளை பெற்றால் மாத்திரமே வெற்றிபெற முடியும்.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மூலம் கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச பெற்ற 69 இலட்சம் வாக்குகளில் 40 வீதமான வாக்குளை ரணில் பெற்றால் அவரால் 27 இலட்சம் வாக்குளை நெருங்க முடியும்.
பொதுத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளுடன் சேர்த்து ரணிலால் 30 இலட்சம் வரையான வாக்குகளையே பெற முடியும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு 418,000 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அவ்வாறெனின் அவர் மேலும் 65 இலட்சம் வாக்குளை பெற்றால் மாத்திரமே வெற்றிபெற முடியும்.
ஆகவே, பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் சஜித், அனுர, ரணில் ஆகிய மூவரில் சஜித் பிரேமதாசவுக்கே வெற்றியை நெருங்க முடியும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் 55 இலட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். முழு நாடும் அறிந்திருந்தது கோட்டாபய ராஜபக்சதான் தேர்தலில் வெற்றிபெற போகிறார் என.
அத்துடன், அவரது அலைதான் நாடு முழுவதும் இருந்தது. அத்தகைய சந்தர்ப்பத்திலும் சஜிம் பிரேமதாச 55 இலட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். அதனால் எஞ்சியுள்ள 15 இலட்சம் வாக்குகளை நெருங்கக் கூடிய ஒரே வேட்பாளர் சஜித் மாத்திரமே.
எதிர்க்கட்சித் தலைவராக அவர் செய்துள்ள சேவை மற்றும் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை வழங்கக் கூடிய தரப்பினர் அவரிடம் இருப்பதால் சஜித் நிச்சயமாக தேர்தலில் வெற்றிபெறுவார்.” என்றார்.