வியாழேந்திரன் வேட்பு மனு நிராகரிப்பு

வியாழேந்திரன் வேட்பு மனு நிராகரிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முன்னால் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை தலைமை வேட்பாளராக கொண்ட ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பனி வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்திலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை தலைமை வேட்பாளராக கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனநாயக தேசிய கூட்டணியும் மேலும் 6 சுயேட்சைக்குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னால் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் போட்டியிட்ட கட்சியின் வேட்புமனுவில் சத்தியக் கடதாசியில் கையொப்பமிடப்படாதமையாலேயே குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் 2015 ம் ஆண்டு தேர்தலில் புளொட் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரான இவர் 2020 ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி கட்சி மாறி பொது ஜன பெரமுனை கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி இராஜாங்க அமைச்சாரன இவர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துவந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது தலைமையில் போட்டியிடுவற்காக 8 பேர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையிலேயே அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This