தேர்தலுக்குப் பின் வன்முறையா!- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்தி என்ன?: விதிமுறைகள் மீறப்படுகிறதா?

தேர்தலுக்குப் பின் வன்முறையா!- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்தி என்ன?: விதிமுறைகள் மீறப்படுகிறதா?

தீர்மானமிக்க 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆயத்தமாகி வரும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த ஒரு கருத்து தொடர்பில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கடந்த 13ஆம் திகதி பொதுமக்களை அச்சத்திற்குட்படுத்தும் வகையிலான விடயங்களை உள்ளடக்கி ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி, சில செய்தித் தளங்கள் “எந்தவொரு தேர்தலின் பின்னரும் வன்முறைகள் இடம்பெறும்” என செய்தி வெளியிட்டிருந்ததையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்தக் கருத்தை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள நிலையில் கடந்த சில தேர்தல்களை நோக்கும் போது தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

அவ்வாறு இருக்கும் போது பொறுப்பற்ற முறையில் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்தல் அதுவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் மூலமே அதனை பிரச்சாரம் செய்திருப்பது மிகவும் பாரதூரமான தேர்தல் விதி மீறல் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில் ”ஜூலை 2022 இல் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டதால், 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது” என தலைப்பிடப்பட்டிருந்தது.

அதன் மூலம் இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக வலியுறுத்தப்பட்ட கருத்து கீழே காட்டப்பட்டுள்ளது.”

”எந்தவொரு தேர்தலுக்கு பின்னரும் வன்முறைச் செயல்கள் இடம்பெறும். நாம் அவற்றை நிறுத்த வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு எந்த வகையிலும் வன்முறைகள் நடைபெறக் கூடாது. அது குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.”

எவ்வாறாயினும், அண்மைக்கால தேர்தலுக்கு பின்னரான வரலாற்றில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில், விசேட கவனம் செலுத்தி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This