ராஜபக்சர் குடும்பத்தில் ஒரு விக்கெட் ‘அவுட்’: ரணிலின் மேடையில் ஏற தயார்

ராஜபக்சர் குடும்பத்தில் ஒரு விக்கெட் ‘அவுட்’: ரணிலின் மேடையில் ஏற தயார்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தேர்தல் பிரசாரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி அநுராதபுரம் சல்காது மைதானத்தில் தமது முதல் பிரசாரக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ள உள்ளார்.

இம்முறை 100 இற்கும் அதிகமான பொதுக் கூட்டங்களில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ள உள்ளதாகவும் மாவட்ட அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அநுராதபுரத்தில் நடைபெற உள்ள முதலாவது பொதுக் கூட்டத்தில் ராஜபக்சர் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினர் மேடையேற உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

தனியார் யூடியூப் நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச களமிறங்கியுள்ள பின்புலத்தில் அவர்களது குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டால் அது நாமல் ராஜபக்சவின் வாக்குகளில் மேலும் சரிவை ஏற்படுத்தும் என அக்கட்சிக்குள் பேசப்படுகிறது.

CATEGORIES
Share This