யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இணைந்து பணியாற்ற தயார்
நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க ஜானாபதி தேர்தலில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், யாருடன் வேண்டுமானாலும் இணைந்து பணியாற்றலாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உலகில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் செல்வாக்கு தொடர்பில் புதுடில்லியில் பேசும் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்
அதன்படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் என்றாலும், வெற்றி பெறுபவர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தொடர்பாக செயல்படுவார் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, வெளிநாடுகளின் ஜானாதிபதி தேர்தல் குறித்து இந்தியாவால் கருத்து கூற முடியாவிட்டாலும், உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் ஆகியவை உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.