இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி ஈரோடு – பவானிசாகரில் எதிர்வரும் 15ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
பவானிசாகர் சந்தை வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரோடு – பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அங்கு உள்ளூர் வாசிகளை விடவும் இலங்கைத் தமிழர்கள் அதிகமான உள்ளதால், அங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அதற்கமைய, இரு தரப்பினருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாக மாறாத வகையில் இலங்கைத் தமிழர்களுக்கான குடியிருப்பு திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி எதிர்வரும் 15ஆம் திகதி ஈரோடு – பவானிசாகர் பகுதியில் உள்ள வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி, வர்த்தக நிலையங்களை அடைத்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கூட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மீனவர் சங்கங்கள், மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல தரப்பினர் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This