நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் – விமானி பலி!

நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் – விமானி பலி!

போர்த்துகல் நாட்டின் தெற்கில் உள்ள பெஜா விமான நிலையத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது இரு சிறிய ரக விமானங்கள் மோதிக் கொண்டதில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு விமானி காயமடைந்துள்ளார். விமான சாகச நிகழ்ச்சியின் போது பல இராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் சாகசங்களில் ஈடுபட்டன நடுவானில் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அடுத்தடுத்து சாகசங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இதன்போது 2 சிறிய ரக விமானங்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தையடுத்து குறித்த விமான சாகச நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This