பங்களாதேஷில் 600 கைதிகள் தப்பியோட்டம்

பங்களாதேஷில் 600 கைதிகள் தப்பியோட்டம்

பங்களாதேஷில் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி 2 சிறைகளில் 600-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சிறைக் கலவரத்தில் 12 கைதிகள் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு நாடு முழுவதும் அரசியல் குழப்பம் நிலவியது. ஹசீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி காவல் நிலையங்கள் மீது கலவரக்காரா்கள் தாக்குதல் நடத்தியால் காவலா்கள் அந்த நிலையங்களைக் கைவிட்டுச் சென்றனா். இதனால் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க அதிகாரிகள் திணறினா்.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, டாக்காவிலுள்ள இரு சிறைச்சாலைகளில் கைதிகள் கடந்த வியாழக்கிழமை கலவரத்தில் ஈடுபட்டனா். அப்போது சிறைக் காவலா்களை அவா்கள் தாக்கினா். பாதுகாப்புக்காக சிறைக் காவலா்கள் சுட்டத்தில் 12 கைதிகள் உயிரிழந்தனா். இருந்தாலும், அந்த இரு சிறைகளில் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

CATEGORIES
Share This