ட்ரம்ப் மீதான தாக்குதல் போன்று மீண்டும் நிகழலாம்; எச்சரிக்கும் விசாரணை அறிக்கை!

ட்ரம்ப் மீதான தாக்குதல் போன்று மீண்டும் நிகழலாம்; எச்சரிக்கும் விசாரணை அறிக்கை!

அமெரிக்க இரகசிய சேவையில் “ஆழமான குறைபாடுகள்” உள்ளன, அவை விரைவாக தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனினில், டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்ததைப் போன்ற கொலை முயற்சிகள் மீண்டும் நிகழலாம் என்று விசாரணை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டை விசாரிக்கும் ஒரு சுயாதீன குழு, அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது.

அந்த விசாரணை அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவின் பட்லர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் டிரம்ப் காயமடைந்து, பேரணியில் பங்கேற்றவர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலர் அலெஜான்ட்ரோ மேயர்காஸ், முன்னாள் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்தார்.

52 பக்க அறிக்கையை முன்வைத்த குழு, அமெரிக்க இரகசிய சேவைக்கு அடிப்படை சீர் திருத்தம் தேவை என்றும், அதன் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.

அவ்வாறு இல்லாது போனால் மற்றுமோர் பட்லர் தாக்குதல் மீண்டும் நடத்தப்படலாம் என்றும் குழு எச்சரித்தது.

அமெரிக்க இரகசிய சேவை ஏற்கனவே அதன் தோல்விகளை ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு நடந்து முடிந்த சில வாரங்களுக்குப் பின்னர் அதன் பணிப்பாளர் இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்கத்கது.

CATEGORIES
Share This