ஏப்ரல் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் – பாடசாலைகளுக்கு விடுமுறை!

ஏப்ரல் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் – பாடசாலைகளுக்கு விடுமுறை!

ஏப்ரல் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த வானியல் அதிசயம் வட அமெரிக்கா முழுவதும் தெரியும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். இந்த நிகழ்வு சுமார் 1,000 கிலோ மீட்டர் வரை தெரியும்.

இந்நிலையில் வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979 இற்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணம் தென்பட உள்ளதால் லட்சக்கணக்காக மக்கள் அங்கு குவிய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நயாகரா, கனடாவில் தெற்கு ஒன்டாரியோவில் அமைந்துள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சி உலக புகழ்பெற்றது. வரும் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், அது நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபளிக்கும். இந்த நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு கூட வாய்ப்புள்ள நிலையில், அவசர நிலை அறிவித்துள்ளதாக நயாகரா பிராந்தியத் தலைவர் ஜிம் பிராட்லி தெரிவித்துள்ளார்.

சூரிய கிரகணத்தின் அன்று மில்லியன் கணக்கான மக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியில் கூடுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரிய கிரகணம் நிகழும் முன் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை இருப்பு வைத்துக்கொள்ளுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீதி விதிகளை பின்பற்றவும், சூரிய கிரணத்தை சாலையில் நின்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நயாகராவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து ISO 12312-2 சான்றளிக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This