விபரீதத்தில் நாமல்?: 10 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளனர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச முன்மொழியப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர், பொருளாளர், தேசிய அழைப்பாளர் என அனைத்து மாவட்ட தலைவர்களும் தற்போது ரணில் விக்கிரமசிங்க அணியில் இணைந்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து 128 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்த நிலையில் தற்போது 10 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளனர்.
அவர்களுள், பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் ஒரு கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் முற்றாக வீழ்ச்சியடைந்ததையடுத்து நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.