ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் – யாஹ்யா சின்வார்: போர் செயற்பாடுகளில் மாற்றம் நிகழுமா?

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் – யாஹ்யா சின்வார்: போர் செயற்பாடுகளில் மாற்றம் நிகழுமா?

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் காசா முனையில் செயற்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர், இஸ்ரேலில் இருந்து சுமார் 251 பேரை பணயக் கைதிகளாக கடத்திச் சென்றது. இதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையிலான போர் மேலும் தீவிரமாகியது.

இதனிடையே ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த 31ஆம் திகதி ஈரான், தெஹ்ரானிலுள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து கொல்லப்பட்டார்.

இக் கொலையை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹமாஸ் ஆயுதக் குழுவின் காசா முனை பிரிவுக்கு மட்டும் தலைவராக செயற்பட்டு வந்த யாஹ்யா சின்வார் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் ஆயுதக் குழு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This