மத்திய இலண்டனில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம்!

மத்திய இலண்டனில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம்!

மத்திய இலண்டனில் பலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலஸ்தீன ஒற்றுமை இயக்கம் இந்த எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அதில் இணைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு உடனடி போர் நிறுத்தம் தேவை என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் மேற்கு இலண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் சென்ற முதலாவது போராட்டம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டத்தை கட்டுப்படுத்த சுமார் 1,500 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டனர், போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This