ராஜபக்ச கட்சியா மாற்றுக் குழுவா: ரணிலின் தீர்மானம் எது?

ராஜபக்ச கட்சியா மாற்றுக் குழுவா: ரணிலின் தீர்மானம் எது?

இலங்கைத்தீவில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கு தயாராகும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்காக முதலில் ரணில் மற்றும் பசில் ராஜபக்ச இடையில் மாத்திரம் கலந்துரையாடல் தீர்மானிக்கப்பட்டாலும் இதற்காக துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குழு மற்றும் மாற்றுக் குழுவில் சிலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

கலந்துரையாடலில், மொட்டுக்கட்சியுடன் எந்தவொரு விதத்திலும் கூட்டணி அமைக்கத் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மாற்றுக் குழு ரணில் முன்னிலையில் பசில் ராஜபக்சவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச கூட ஜனாதிபதியுடன் பயணிக்கத் தயாரில்லை எனவும் ரணிலுடன் இருப்பது மொட்டுக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு குழு எனக் கூறும் போதும் கூட நாமலின் எதிர்ப்பை ஒரு புறம் வைத்து விட்டு அரசாங்கத்திற்கு மற்றும் ஜனாதிபதிக்கு உதவி செய்யும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்கள் மூலம் மனஸ்தாபங்கள் மாத்திரமே உருவாவதாக பசில் ராஜபக்ச குறித்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட வஜிர அபேவர்தனவுக்கு தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் மொட்டுக் கட்சியா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்களா என ஜனாதிபதிக்கு தெரிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது என மாற்றுக் குழுவில் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This