மகிந்தவே எதிர்பார்க்காத முடிவு; நேற்று நண்பர் இன்று ரணிலின் ஆதரவாளர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனுராதபுரம் மாவட்டக் கூட்டத்தில் அனைவரும் ஏகமதாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
எஸ்.எம்.சந்திரசேன கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராகவும் நம்பிக்கைக்குரியவராக செயல்பட்டவர்.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க அனுராதபுரம் மாவட்டத்தில் கடுமையான பிரசாரங்களை மேற்கொண்ட முக்கிய நபராக உள்ள இவர், இம்முறை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளமையை மகிந்த ராஜபக்ச சற்றேனும் எதிர்பார்த்திருக்க மாட்டார் என அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
CATEGORIES செய்திகள்