தேர்தல் பிரச்சார மேடைகளில் பெண் கதாபாத்திரங்கள் வேண்டும்: ஆழ்ந்த சிந்தனையில் சஜித்?
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் தலைசிறந்த பெண் கதாபாத்திரங்கள் மற்றும் பேச்சாற்றல் மிக்க பெண் கதாபாத்திரங்களை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என பிரச்சார ஆலோசனை முகவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரவி ஜயவர்தன, லக்ஷ்மன் பொன்சேகா போன்றவர்களும் இதனை சுட்டிக்காட்டிய போதிலும், அதற்கான ஏற்பாடுகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தின் முன் குற்றவாளியாக தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் பெண்கள் சார்பிலான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார் எனவும், அந்த நிலை தற்போது இல்லை எனவும் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஜலனி பிரேமதாச சஜித் பிரேமதாசவுடன் இணைந்து பெரும் அளவிலான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.