மழை வேண்டி கழுதைக்கு கல்யாணம் நடத்திய மக்கள்!
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், மழை வரவேண்டி, தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சில சாஸ்திரங்களைச் செய்தனர்.
அப்பகுதி மக்கள், சில நாள்களுக்குமுன் கழுதைகளை வைத்து, சில சடங்குகள் செய்து, பின்னர் பயிர் நடவு செய்துள்ளனர். இவ்வாறு செய்வதன்மூலம் மழை பெய்யும் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல, பயிர் நடவு செய்த ஒருவார காலத்திலேயே மழையும் பெய்துள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இரண்டு கழுதைகளுக்கு மணமக்கள்போல அலங்காரமிட்டு, திருமணமும் நடத்தி வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, மூன்று கிலோ வரையில் குலோப் ஜாமூனை உணவாக அளித்தும் மகிழ்ந்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக அவர்கள் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதாகவும், அவ்வாறு செய்வதால்தான் மழை பெய்கிறது என்றும் கூறுகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் செய்யப்படும் இந்த நடைமுறை வெற்றியில் முடிவதாகவும் தெரிவிக்கின்றனர்.