சரத்பொன்சேகா கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா?; விளக்குகிறார் எதிர்கட்சியின் பிரதம கொறடா
கட்சி மீது வழக்கு தொடுத்து தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு எவ்வாறு நாடாளுமன்றத்தில் கால அவகாசம் வழங்க முடியும் என எதிர்கட்சியின் பிரதம கொறடா சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்தார்.
தன்னை நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கவிடாது எதிர்க்கட்சிகள் தடுப்பதற்கு முயற்சிப்பதாக பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.
தனக்கு நாடாளுமன்றில் பேசுவதற்கு நேரம் வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்சேகா சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தவிடயம் தற்போது பேசுபொருளாக மாறியதையடுத்து எதிர்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல இது குறித்து பதிலளித்துள்ளார்.
கட்சித் தலைவர் பேசவேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லையென தெரிவித்த அவர் கட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர் என்ற வகையில் தமக்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமற்றது என்பதை உணர்ந்தே பெரிதாக நேரம் ஒதுக்க அனுமதிக்கவில்லை.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவது தொாடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை.
இணையத்தளம் ஒன்றில் வெளியான உண்மைக்குப் புறம்பான தகவலுக்கமைய கட்சிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
விவாதத்தின் போது கருத்து தெரிவிப்பதற்கு நேரம் கோரிய பிரதம கொறடாவிடம் வினவிய போது,
கால அவகாசம் வழங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுதாம் நிகழ்த்தியதாகத் சரத்பொன்சேகா தெரிவித்தார்” என்றார் லக்ஷ்மன் கிரியெல்ல.