தன்னுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் நன்றி தெரிவிப்பு!

தன்னுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் நன்றி தெரிவிப்பு!

நாட்டைக் கட்டியெழுப்பும் கடினமான பயணத்தில் கட்சி அரசியலை விடுத்து தன்னுடன் இணைந்துள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், செழிப்பான இலங்கையை உருவாக்குவதற்கு ஏனையோரையும் தன்னுடன் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

நாடு நெருக்கடியில் இருந்தபோது, எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் போராடும்போது என்னையும் எனது திட்டத்தையும் நீங்கள் நம்பினீர்கள்.

சவால்கள் சமாளிக்க முடியாததாகத் தோன்றியபோது உங்களின் அர்ப்பணிப்பு எனக்கு ஊக்கமளித்தது.

இந்த பயணத்தில் இடைநடுவில் இணைந்த எம்.பி.க்களுக்கும் முன்னேற்றத்தைக் கண்டு, மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கும் நன்றி.

இப்போது எங்களுடன் இணைந்திருப்பவர்களின் ஆதரவு நாங்கள் செல்லும் நேர்மறையான திசையை காட்டுகிறது.

கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபடுவதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஒன்றாக, நாம் இன்னும் சாதிக்க முடியும்.

இன்னும் எங்களுடன் சேராத எம்.பி.க்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். செழிப்பான, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எமது பணி தொடர்கிறது.

மேலும் அதனை நனவாக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். இந்த பயணம் எளிதானது அல்ல, ஆனால் ஒன்றாகச் சேர்ந்து அதனை இலகுவாக்கலாம். அனைவரும் ஒன்றிணைந்து நம்பிககையான இலங்கையை உருவாக்குவோம்.

எமது நாட்டின் எதிர்காலத்திற்கான உங்கள் தைரியமான அர்ப்பணிப்புக்கு நன்றி” என அவா் மேலும் தொிவித்துள்ளாா்.

CATEGORIES
Share This