மகிந்தவின் வேட்பாளர் விசேட நிகழ்வில் அறிவிப்பு: தேர்தல் போருக்குத் தயார்

மகிந்தவின் வேட்பாளர் விசேட நிகழ்வில் அறிவிப்பு: தேர்தல் போருக்குத் தயார்

எதிர்வரும் சில தினங்களுக்குள் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

விசேட நிகழ்வொன்றில் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக அக்கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

அந்த வேட்பாளருடன் தேர்தல் போருக்கு நாம் தயாராகி வருகிறோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை இது வரை அறிவிக்காததன் காரணம், அதனை விசேட நிகழ்வொன்றை நடத்தி அறிவிக்கும் நோக்கமே என அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”ஆசன ரீதியாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொட்டுக்கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமா என்ற ஒரு கேள்வி பரவலாக காணப்பட்டு வந்தமை எங்களுடைய பிரச்சாரத்தை மேலும் ஒரு படி முன்னால் வைத்தது.

இந்த குறிப்பிட்ட சில தினங்களை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட நிகழ்வுக்கு ஆயத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.

CATEGORIES
Share This