பொலிஸ் நிலையங்களில் விசேட தேர்தல் செயற்பாட்டு அறைகள்!
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகும் வகையில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட தேர்தல் செயற்பாட்டு அறைகள் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வலயத்துக்கும் பொறுப்பான அதிகாரிகளும், குறித்த பகுதியில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களும் குறித்த செயற்பாட்டு அறைகளின் செயற்பாடுகளை மேற்பார்வையிட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டு அறைகள் நிறுவப்பட்டவுடன் தேர்தல் வன்முறை மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பெறப்படும் எனவும்பொலிஸ்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES செய்திகள்