காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு
காணாணல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரணை சனிக்கிழமை (27) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .
கடந்த யுத்த காலத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள் அது தொடர்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 உறவுகளுக்காக விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது .
இதில் திருகோணமலை சார்பாக 16 , கந்தளாய் 06, மொறவெவ 04, தம்பலகாமம் 22 என விசாரணைகளுக்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டன. இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு இடம்பெற்றன.
இதில் காணாமல் போன அலுவலக தவிசாளர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.