ரணிலைச் சுற்றியுள்ள குழுக்களிடையே கடும் மோதல்; தொடரும் பதவிச் சிக்கல்?

ரணிலைச் சுற்றியுள்ள குழுக்களிடையே கடும் மோதல்; தொடரும் பதவிச் சிக்கல்?

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள போதிலும், அவரைச் சுற்றி திரண்டிருக்கும் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான முரண்பாடுகளை குறைப்பதற்காக பொது வேட்பாளர் முத்திரையைப் பெற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதே ரணில் விக்கிரமசிங்கவின் உத்தி என அவதானிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு கட்சியோ அல்லது வாக்காளர் சின்னமோ இருக்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போதைய உள் முரண்பாடுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ”மவ்பிம” என்ற சிங்கள பத்திரிகை பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது.

”அதைத் தவிர வேறு விடயங்கள் உள்ளன. கற்பனை செய்து பாருங்கள். தற்போது கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்க இருக்கிறார்.ருவன் விஜேவர்தன இருக்கிறார்.

மாவட்டத்தின் தலைமைப்பதவியை வழங்குவது யாருக்கு? காலியில் மனுஷ, வஜிர அபேவர்தன தலைமைப்பதவி யாருக்கு?

அநுராதபுரத்தில் ஷெஹான் சேமசிங்க, ஹரிசன் ஆகியோர் உள்ளனர். தலைவர் யார்?

கொழும்பில் ரவி கருணாநாயக்க இருக்கிறார், பின்னர் காமினி லோகுகே மற்றும் சரத் வீரசேகர உள்ளனர். “மாவட்ட தலைவர் யார்” போன்றவை தற்போதைய நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளன.” என செய்தி தெரிவிக்கின்றது.

CATEGORIES
Share This