அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்தரப்பினர் முன்நிலையாகாத நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
குறிப்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சம்வத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக சபர்களை கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இன்றைய தினம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருகை தராத நிலையில் இது தொடர்பான மேலதிக தகவல்களை நுவரெலியா பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை பரிசீலனை செய்த நீதிபதி ஜயமினி அம்பகஹவத்த வழக்கின் பிரதான சந்தேக நபரான அமைச்சர் ஜீவன்
தொண்டமான் உள்ளிட்ட நபர்களை கைதுசெய்து ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.