தொடர்கதையாகும் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: வைத்தியர் அர்ச்சுனா சொன்ன குற்றச்சாட்டு உண்மையா?

தொடர்கதையாகும் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: வைத்தியர் அர்ச்சுனா சொன்ன குற்றச்சாட்டு உண்மையா?

யாழ்ப்பாணாம், சாவகச்சேரி வைத்தியசாலையில் நீடித்த சர்ச்சைகள் ஓய்ந்துள்ள நிலையில், மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக் பதிவொன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த வைத்தியசாலை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீண்டுகொண்டே செல்கின்றன.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் முன்வைத்த பிராதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் வைத்தியசாலையின் நடைமுறைகள் குறித்து பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

அதனை சீர் செய்ய முற்பட்டதால் வைத்தியர் அர்ச்சுனாவை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஒரு கட்டத்தில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மக்கள் ஆதரவு பெருகிய நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் பூதாகரமாகியது.

இதனையடுத்து வைத்தியர் அர்ச்சுனா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வைத்தியர் ரஜீவ் அந்தப் பதவிக்கு நியமிக்கக்பட்டார்.

வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளில் பிரதானமாக “வைத்தியர்கள் கடமை நேரத்தில் வைத்திசாலையில் இருப்பதில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்லவேண்டி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வைத்தியர் அர்ச்சுனாவின் இந்தக் குற்றச்சாட்டை பொது மக்களும் ஆமோதித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்திந்த வைத்தியர்கள், இது முற்றிலும் பொய்யானது என தெரிவித்திருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய தரப்பினர்களும் சரியான விளக்கம் கொடுக்காமல் வைத்தியசாலை விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

வைத்தியர் அர்ச்சுனாவும் தற்போது கொழும்புக்கு அழைக்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, தற்போது பேஸ்புக் பதிவொன்றில் சாவகச்சேரி வைத்திசாலை குறித்து பதிவிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நேற்று இரவு 12.40க்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் அவலம்

வைத்தியர் ராஜீவ் அவர்களின் கவனத்திற்கு…!

நேற்று இரவு 12.40 திருநீல கண்டன் கடிக்கு இலக்காகிய எனது தந்தையை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

புதிதாக இருக்கும் opt க்கு சென்றோம் அங்கும் யாரும் இல்லை…

பின்னர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அறைக்கு சென்று பார்த்தோம் அங்கும் யாரும் இல்லை…

அதன் பின் தற்போது யாழ்ப்பாண போதான வைத்திய சாலைக்கு கொண்டு சென்று A&E இல் அனுமதிக்க பட்டுள்ளார்.

நேற்று இரவு cctv ஐ பார்க்கவும் சாவகச்சேரி வைத்திய சாலை நிர்வாகம்..

தகவல் – பாதிக்கப்பட்டவர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oruvan

CATEGORIES
Share This