அமெரிக்க புதிய அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் !; ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வில் முரண்பாடு ?; ஒபாமாவின் மௌனமும் – ட்ரம்பின் வெற்றி முழக்கமும் !!

அமெரிக்க புதிய அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் !; ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வில் முரண்பாடு ?; ஒபாமாவின் மௌனமும் – ட்ரம்பின் வெற்றி முழக்கமும் !!

ஐங்கரன் விக்கினேஸ்வரா

கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கருப்பின பெண்ணாக அறியப்படுவார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், செய்தி நிறுவனங்களிடம் அதிபர் பைடன் விலகல் குறித்து தனது கருத்தை தெரிவிக்கையில், அதிபர் பொறுப்புக்கு பைடன் அறவே தகுதியற்றவர். வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் கண்டால், தேர்தலில் அவரை வீழ்த்துவது எளிது என கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

பராக் ஒபாமா மெளனம் :

கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிந்தாலும் ஜனநாயக கட்சியின் ஒபாமா உட்பட முக்கிய தலைவர்கள் மெளனம் காத்துள்ளனர்.

ஆயினும் தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளதை வரவேற்று பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, கமலா ஹாரிஸ் வேட்பாளராவதை ஆதரிக்கவில்லை என்றே தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால், ஜோ பைடன் முன்மொழிந்துள்ள கமலா ஹாரிஸ் தொடர்பில் ஒபாமா கருத்தேதும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஒபாமா மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கமலா ஹாரிஸ் தொடர்பில் தற்போது மெளனம் காத்து வருவதாகவே கூறப்படுகிறது.

அத்துடன் ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ளதை அடுத்து, தற்போது யாருக்கு வாய்ப்பு என சில பெயர்களும் வெளிவரத் தொடங்கியுள்ளது.

ஜனநாயக கட்சியின் புதிய வேட்பாளர்கள்:

அதில், 2028ல் ஜனாதிபதி வேட்பாளராக களம் காணும் வாய்ப்புள்ள, இரண்டாவது முறையாக மிச்சிகன் ஆளுநராக பொறுப்பில் இருக்கும் கிரெட்சன் விட்மரின் (Gretchen Whitmer) பெயரும் ஊடகங்களில் வெளிவருகிறது.

தற்போதைய கலிபோர்னியா ஆளுநரும் 2028ல் ஜனாதிபதி கனவுடன் இருக்கும் கவின் நியூசோம், (Gavin Newsom), போக்குவரத்து செயலர் பீட் புட்டிகீக் (Pete Buttigieg) பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ(Josh Shapiro) மற்றும் ஹயாட் ( Hyatt ) ஹொட்டல் குழுமத்தின் வாரிசும் பெரும் கோடீஸ்வரரும் தற்போதைய இல்லினாய்ஸ் ஆளுநருமான ஜேபி பிரிட்ஸ்கர் (JB Pritzker) ஆகியவர்களின் பெயர்களே டொனால்டு ட்ரம்புக்கு எதிரான வேட்பாளர்களாக முன்வைக்கப்படுகிறது.

இவர்களுடன், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி மொத்தமாக அச்சப்படும் மிச்செல் ஒபாமாவின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் தமக்கு ஜனாதிபதி பொறுப்பில் ஆர்வல் இல்லை என்றே மிச்செல் ஒபாமா கூறி வருகிறார். ஆயினும் இதுவரை ஜனநாயக கட்சி முடிவினை மேற்கொள்ளவில்லை.

அமெரிக் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலம் உள்ள நிலையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனநாயக கட்சி மாநாட்டுக்கு முன்னதாக கட்சியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக இருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் பரப்புரை மேற்கொண்ட நிலையில் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஆக ஆதரவு தெரிவித்துள்ளார்.

பைடனின் தடுமாற்றம்:

அதிபர் பைடன், தனது தேர்தல் பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இது அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடைய செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென சொல்லப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் அதிருப்தியுடன் இருந்தனர். இந்நிலையில், தேர்தலில் இருந்து அவர் விலகி உள்ளார்.

2020-ல் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் கமலா ஹாரிஸ் தான்.

இந்த சூழலில் தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமென ஆதரவு கோரப்பட்டு வந்தது.

ஜனநாயக கட்சி உறுப்பினர்கள்
அவருக்கு யாரும் போட்டியாக களம் காணாத வகையில் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இளமையில் கமலா ஹாரிஸ்:

1964 அக்டோபர் 20 இல், கலிபோர்னியா, ஓக்லாந்தில் கமலா ஹாரிஸ் பிறந்தார். இவருன் தந்தையார் டொனால்டு ஜே. ஹாரிஸ் ஜமேக்காவில் இருந்து 1961 இல் அமெரிக்கா வந்து கலிபோஒர்னியா பல்கலைக்கழகத்தில் 1964 இல் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்று, இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தாயார் சியாமளா கோபாலன், ஓர் உயிரியலாளர், மார்பகப் புற்றுநோய்பு மரபணு ஆய்வில் ஈடுபட்டவர். சியாமளா 1958 இல் தனது 19-வது அகவையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உட்சுரப்பியலில்்பட்டப் படிப்புக்காக தமிழ்நாட்டில்இருந்து அமெரிக்கா வந்து,தனது முனைவர் பட்டத்தை 1964 இல் பெற்றார்.

அதி உயர் பதவியில் :

ஹவார்டு மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியில் பட்டம் பெற்ற இவர் தனது பணியை அலமேடா கவுண்டி உள்ளூர் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் ஆரம்பித்து, பின்னர் சான் பிரான்சிஸ்கோ அரசு வழக்குரைஞர் அலுவலகத்திலும் பணியாற்றினார்.

2003 இல், சான் பிரான்சுக்கோ மாவட்ட தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இலும், பின்னர் 2014 இலும் கலிபோர்னியா மாநில தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2016இல் அமெரிக்க மேலவைத் தேர்தலில் லொரெட்டா சான்செசைத் தோற்கடித்து கலிபோர்னியாவுக்கான மேலவை உறுப்பினரானார். இதன் மூலம், கலிபோர்னியா மாகாணத்திலிருந்து அமெரிக்க மேலவைக்குத் (மாநிலங்களவை) தெரிவானார்.

அமெரிக்க வரலாற்றில், 2017 முதல் கலிபோர்னியாவுக்கான மூதவை உறுப்பினராக இருந்த கமலா ஹாரிஷ், தமிழ் மற்றும் ஜமெய்க்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா பல்லின அமெரிக்கராவார்.

அத்துடன் முதலாவது ஆசிய-ஆபிரிக்க கலப்பினத்தின்்முதலாவது பெண் துணைக் குடியரசுத் தலைவராக 2020 இலிருந்து பதவியில் இருந்தார்.

அத்துடன் அமெரிக்க வரலாற்றில், இத்தகைய அதியுயர் பதவி ஒன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண்ணும் இவர் ஆவார்.

CATEGORIES
Share This