பாரிஸ் ஒலிம்பிஸ்க்கு பதிலாக ரஷ்யாவில் பிரிக்ஸ் விளையாட்டு போட்டி!; ‘கசான்’ போட்டியில் பல நாடுகள் பங்கேற்பு !!

பாரிஸ் ஒலிம்பிஸ்க்கு பதிலாக ரஷ்யாவில் பிரிக்ஸ் விளையாட்டு போட்டி!; ‘கசான்’ போட்டியில் பல நாடுகள் பங்கேற்பு !!

ஐங்கரன் விக்கினேஸ்வரா

2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ரஷ்யாவும், அதன் ஆதரவு நாடுகள் விலக்கப்பட்டுள்ள நிலையில் கசானில் நடந்த பிரிக்ஸ் (BRICS )விளையாட்டுப் போட்டிகளில் பெருமளவு நாடுகள் பங்கேற்றுள்ளன.

கசானில் பிரிக்ஸ் விளையாட்டு போட்டி:

கசானில் ஆரம்பமான பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூன் 23இல் நிறைவடைந்தன. போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளது.

ரஷ்ய விளையாட்டு வீரர்கள் 173 தங்கம், 101 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 343 பதக்கங்களை குவித்தனர். பெலாரஸ் 32 தங்கம், 56 வெள்ளி, 68 வெண்கலப் பதக்கங்களையும், சீனா 17 தங்கம், 17 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றன.

தெற்கு ரஷ்யாவில் உள்ள டாட்ர்ஸ்தான் (Tatarstan) குடியரசின் தலைநகரான கசான் நகரில் (Kazan) ஜூன் 23 வரை நடந்த இரண்டு வார நிகழ்வுகளில் ஏறக்குறைய 80 நாடுகள் பங்கேற்றன.

பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நிகழ்வாக, இந்த அமைப்பை உருவாக்கிய நாடுகளை விட பல நாடுகளை உள்ளடக்கி நடந்துள்ளது.

பிரிக்ஸ் அரசியலும் – விளையாட்டும்:

பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் எட்டு நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அரசுகளுக்கிடையேயான அமைப்பின் வருடாந்த நிகழ்வாகும். இப்போது ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் கசானில், பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.கடைசியாக 2023 இல் தென்னாப்பிரிக்க நகரமான டர்பனில் இப்போட்டி நடைபெற்றது.

அல்ஜீரியா, பஹ்ரைன், பங்களாதேஷ், பெலாரஸ், ​​பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், குவைத், பாகிஸ்தான், செனகல், தாய்லாந்து, வெனிசுலா, வியட்நாம் மற்றும் ஏமன் ஆகிய மொத்தம் 15 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர முறையாக விண்ணப்பித்துள்ளன.

அத்துடன் பின்வரும் நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன: அங்கோலா, கேமரூன், கொலம்பியா, கொமரோஸ், டிஆர் காங்கோ, காபோன், கினியா-பிசாவ், கயானா, இந்தோனேசியா, ஜமைக்கா, லிபியா, மியான்மர், நிகரகுவா, கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, சூடான், சுரினாம், செர்பியா, சிரியா, துனிசியா, துருக்கி, சோமாலியா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வே.

பல நாடுகளின் பிரதிநிதிகள்:

ரஷ்யாவின் மூன்றாவது தலைநகரம் என்று அழைக்கப்படும் கசானில் இப்போட்டி நடைபெற்றது. இதற்கு முன்பாக இந்தியாவின் கோவா (2016), சீனாவின் குவாங்சோ (2017) மற்றும் ஜோகன்னஸ்பர்க் (2018) மற்றும் டர்பன் (2023) ஆகிய நகரங்களில் இந்த பிரிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன.

ரஷ்யா, பிரேசில் மற்றும் சீனாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டமை அறிந்ததே.

இந்தியாவுக்கும் பதக்கம்:

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கும் பதக்கம் கிடைத்துள்ளது.
மகளிர் குழுவுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

இத்தகைய வெற்றிகள் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் 8வது இடத்தினை பெற்றுள்ளது.

டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்:

உலகளாவிய தென்பகுதி நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவத்தை பிரிக்ஸ் வழங்கியுள்ளதை மனதார வரவேற்கிறோம் என்றும், இது தற்போதைய காலத்தின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தேவையும் கூட என இந்தியா தெரிவித்துள்ளது.

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தாரக மந்திரத்தில் அனைத்து நாடுகளுடனும் இணைந்து முன்னேறுவதே எங்கள் முயற்சி. அத்துடன் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. இதில் ஒருமித்த கருத்துடன் முன்னேறுவதை வரவேற்கிறோம்.
அனைத்து பிரிக்ஸ் கூட்டாளிகளும்
எங்கள் திட்டத்தை ஆதரிப்பார்கள். இந்த முயற்சிகள் அனைத்திற்கும் பிரிக்ஸ் அமைப்பில் சிறப்பு இடம் அளிப்பது உலகளாவிய தென்பகுதி நாடுகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பதக்கப் பட்டியலில் ரஷ்யா முன்னிலை:

கசானில் ஆரம்பமான பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 23இல் நிறைவடைந்தன. பதக்கப் பட்டியலில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளது.

ரஷ்ய விளையாட்டு வீரர்கள் 173 தங்கம், 101 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 343 பதக்கங்களை குவித்தனர். பெலாரஸ் 32 தங்கம், 56 வெள்ளி, 68 வெண்கலப் பதக்கங்களையும், சீனா 17 தங்கம், 17 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றன.

பிரேசில் ஒட்டுமொத்தமாக 5வது இடத்தையும், ஈரான் 6வது இடத்தையும், இந்தியா 8வது இடத்தையும், தென்னாப்பிரிக்கா 11வது இடத்தையும், எகிப்து 20வது இடத்தையும், ஐக்கிய அரபு இராச்சியம் 23வது இடத்தையும் பெற்றுள்ளது.

BRICS விளையாட்டுகளின் போது 27 விளையாட்டுகளில் மொத்தம் 387 பதக்கங்கள் வழங்கப்பட்டன, இதில் தென் மற்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு குறிப்பிடத்தக்க சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அத்துடன் 18 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 750 ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டதாக TV BRICS தெரிவித்துள்ளது.

டாட்ர்ஸ்தான் குடியரசின் விளையாட்டுத்துறை மந்திரி விளாடிமிர் லியோனோவ், இந்த விளையாட்டுகள் ஒரு அற்புதமான வெற்றி என்றும் பாராட்டினார். கசானில் நடைபெற்ற BRICS விளையாட்டு வீரர்களின் ஆக்கபூர்வமான உத்வேகத்தை புகழ்ந்தும் கூறினார்.

இந்த போட்டிகளின் விளைவாக, விளையாட்டுத் துறையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்க முயள்கின்றன எனவும் டாட்ர்ஸ்தான் குடியரசின் விளையாட்டுத்துறை மந்திரி விளாடிமிர் லியோனோவ் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This