டிரம்ப் மீது துப்பாக்கிபிரயோகம் நடத்தியவர் தொடர்பில் எவ்பிஐ வெளியிட்ட தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்ட தோமஸ் மத்தியுஸ் குரூக்ஸ் உளரீதியாக பாதிக்கப்படாதவர் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் உளரீதியான பாதிப்பிற்குள்ளானவர் என்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ள எவ்பிஐ அதிகாரியொருவர், அவரது நோக்கம் குறித்தே கவனம் செலுத்துகின்றோம் குறிப்பாக சமூக ஊடகங்களில் அவரது பதிவுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆபத்தான அச்சுறுத்தலான விடயங்கள் எதனையும் காணமுடியவில்லை விசாரணைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளதாகவும் கூறினார். சந்தேக நபரது கையடக்க தொலைபேசியை ஆராய்கின்றோம் அதனை எவ்பிஐயின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு கொள்கைரீதியான காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை,அவர் தனித்து செயற்பட்டுள்ளார் போல தோன்றுவதாகவும் எவ்பிஐ தெரிவித்துள்ளது.
அதேசமயம் சந்தேகநபர் கடந்த காலங்களில் எங்களின் கண்காணிப்புகளின் கீழ் இருக்கவில்லை எங்கள் தரவுகளில் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் எவ்பிஐ தெரிவித்துள்ளது.
அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என விசாரணைகளை மேற்கொண்டவேளை அவர் தனது தந்தை கொள்வனவு செய்த துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளமை என்பது தெரியவந்துள்ளதாக எவ்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய வாகனத்தில் சில வெடிபொருட்கள் காணப்பட்டன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.