திருமலை காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்; கெப் வாகனத்துடன் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

திருமலை காட்டுப்பகுதியில் நடந்த கொடூரம்; கெப் வாகனத்துடன் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

திருகோணமலை – பம்மதவாச்சி காட்டுப் பகுதியில் கெப் வாகனத்திற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை -அலஸ்தோட்டம் பகுதியைச்சேர்ந்த 42 வயதான வியாபாரி ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 12ம் திகதி கெப் வாகனத்துடன் குறித்த நபர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த நபரின் வாகனம் அதேநாளில் அதிகாலை 2.40 மணியளவில் வில்கம் விகாரை பகுதியை தாண்டி மொரவெவ பகுதிக்கு செல்வதை பொலிஸார் கண்டிறிந்தனர்.

சிசிடிவி காணொளி மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த வாகனம் மொரவெவ பிரதேசத்தை தாண்டி செல்லவில்லை என சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து பம்மதவாச்சி பகுதியில் மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் வீதியூடாக பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன் போது காட்டு வழியினூடாக கெப்வாகனம் சென்ற வேளை வாகனத்தின் முன் கண்ணாடி உடைந்து விழுந்த நிலையில் விழுந்து கிடந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

அவ்வழியின் ஊடாக தொடர்ந்து சென்று பார்த்த போது EP DAC-9245 என்ற இலக்கமுடைய டாட்டா கெப் வாகனத்தில் எறியூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
Share This