இலங்கையில் செயற்படும் போலி ஊடகங்கள்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் சாணக்கியன் கேள்வி

இலங்கையில் செயற்படும் போலி ஊடகங்கள்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் சாணக்கியன் கேள்வி

இலங்கை நாடாளுமன்றத்தில் இரு நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற கேள்வி பதில் தொடர்பான விவாதத்தின் போது தன்னால் கேட்கப்பட்ட இரு கேள்விகளுக்கான பதில்கள் உரியவர்களிடம் இருந்து சரியான முறையில் தனக்கு கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இக்கேள்விகள் நிதி மோசடி, மத்தியவங்கி மற்றும் நாட்டினதும் மக்களினதும் பொருளாதார பிரச்சனையுடன் சம்பந்தப்பட்ட கேள்விகள் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்தில் பதில் தருவதாகவும் இரு மாதத்தில் பதில் தருவதாகவும் கால அவகாசம் கேட்டு பல வருடங்களாக பதில் அளிக்காமல் உள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில நேரங்களில் பதில் அளித்துவிட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அதற்கான பதில் Hansard புத்தகங்களில் இல்லை. அதற்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர்கள் அசண்டையீனமாக இருப்பதனை பார்த்தால் இவ்வாறான கேள்விகளுக்கு பதில் அவர்களிடம் இல்லை என்பது மிகவும் தெளிவாக விளங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான பதிலை அவர்கள் அளித்தால் அவர்களுடைய குட்டு வெளியே வந்துவிடுமோ என்ற பயம் அவர்களிடத்தில் காணப்படுகின்றது. தன்னால் முன்வைக்கப்பட கேள்விகள் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“இது பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கான கேள்வி,

வரையறுக்கப்பட்ட பினான்ஸ் நிறுவனத்தில் மறுசீரமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை கோரி இருந்ததாக இப்போதைய நிதி ராஜாங்க அமைச்சரால் 2021.02.10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அறிவாரா என்பதையும்? மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்ட திகதி யாது என்பதையும், நிறுவனத்திற்காக பொருத்தமான முதலீட்டாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு அழைக்கப்படும் திகதி யாதென்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

மேற்படி நிறுவனத்தை கலைப்பதற்கான அனுமதியை கோரி இலங்கை மத்திய வங்கி 2021.02.15 ஆம் திகதி வர்த்தக மேல் நீதிமன்றத்தில் இலக்கம் CH/19/2021/CO என்ற வழக்கினை தாக்கல் செய்துள்ளது என்பதை அது மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கு முரணானது என்பதையும் அதன் மூலம் மேற்படி நிறுவனத்தின் வைப்பாளர்கள் குழப்பத்துக்குள்ளாகி உள்ளார்கள் என்பதையும் அவர் அறிவாரா?

Sri Lanka deposit insurance and liquidity support scheme SLDILSS எனது நிதியை பயன்படுத்தி பாதிப்புக்கு உள்ளான வைப்பாளர் ஒருவருக்கு தலா 500,000 ரூபாய் வீதம் வழங்கப்படும் திகதி யாது என்பதையும் மேற்படி நிதியத்தில் உள்ள 60 பில்லியன் ரூபாய் நிதியை பயன்படுத்தி குறிப்பிட்ட வைப்பாளர்களுக்கு முழு பணத்தையும் வழங்க முடியுமா என்பதையும் இல்லையேல் அதற்கான காரணங்கள் யாது என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கான வினாவாக,

நாட்டில் குழப்பகரமான நிலைமைகளை தோற்றுவிக்க கூடிய செய்திகளை வெளியிடும் பல போலி ஊடகங்கள் இலங்கையில் செயல்படுவதை அறிவாரா என்பதையும் ஆம் எனில் மேற்படி ஊடகங்கள் யாவை என்பதையும் பதிவு செய்யப்படாத போலி இணையதளங்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதையும் ஆம் எனில் அதற்கான நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

அடுத்ததாக சுகாதார அமைச்சருக்கான வினா,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தெற்கு தெருவில் பற்றுப்பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகிலூர் பிரதேசத்தில் மகிலூர் மத்திய மருந்தகம் நிறுவப்பட்டுள்ளது என்பதையும் மக்கள் மிக நீண்ட காலமாக குடியிருந்த காணி ஒன்றை கையகப்படுத்தி மேற்படி மருந்தகம் நிறுவப்பட்டுள்ளது என்பதையும் அம்மக்களுக்கு குடியிருப்பதற்காக வேறொரு இடத்தில் மாற்று காணிகள் வழங்கப்படும் போது முன்பிருந்த காணியை விட அளவில் குறைந்த காணி ஒன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் அறிவாரா? ஆம் எனில் இதற்கான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

ஓந்தாச்சி மடம், குறுமன்வெளி, மகிலூர் எருவில் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் அம்மருந்தகத்திற்கென நிரந்தர வைத்தியர், நோயாளர் காவு வண்டி சேவை வசதிகள் போதியளவிலான கட்டில்கள் மற்றும் போதிய கழிவறை வசதிகள் இல்லை என்பதை அறிவாரா?

ஆம் எனில் மெர்குரிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும் ஆப் நடவடிக்கைகள் யாது என்பதையும் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

இவ்வாறான கேள்விகளுக்கு பதில் கூறப்படாமல் பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது இதற்கான பதில்கள் மிக விரைவில் அவர்களிடம் இருந்து கிடைக்க வேண்டும் இல்லையேல் இவற்றிற்கான தீர்வும் இல்லாமல் போய்விடும்” எனத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This