யாழில் மாமியாரை அடித்து துவைத்து எடுத்த மருமகள்
யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் வயோதிப தாயொருவரை தாக்கிய பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொடிகாமம் மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் வயோதிப பெண்ணொருவர் மீது குறித்த பெண்ணின் மருமகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்திய நிலையில் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த கொடிகாமம் பொலிஸார், தாக்குதல் நடத்திய பெண்ணை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகளுக்கு பின்னர் குறித்த நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.