கனடாவில் அடுத்தடுத்து பதிவான நிலஅதிர்வுகள்; வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள்

கனடாவில் அடுத்தடுத்து பதிவான நிலஅதிர்வுகள்; வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள்

கனடாவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. கனடாவின் தென்மேற்கு பகுதியில் வான்கூவர் நேற்று இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 6.4 பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனடாவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் உள்ள வான்கூவர் தீவில் உள்ள சிறிய மாவட்டமான டோஃபினோவிலிருந்து 130 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6.2 மைல்கள் ஆழத்தில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. டோஃபினோவில் சுமார் 2,000 மக்கள் சிறியளவிலான நிலஅதிர்வை உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த சில மணிநேரங்களில் அதே பகுதியில் மேலும் இரண்டு தடவை நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக பதிவான நிலஅதிர்வு 5.4 ரிக்டர் அளவிலும் மற்றைய நிலஅதிர்வு 4.7 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, 06 ரிக்டர் அளவுக்கு மேலான நிலஅதிர்வுகள் வலுவானதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலஅதிர்வு கட்டிடங்களிலும் உணரப்பட்ட நிலையில் மக்கள் குடியேற்றங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

CATEGORIES
Share This