18-ம் நூற்றாண்டுக்கு பின் முதல்முறை: 2023-24 இல் உலகின் அதிகபட்ச வெப்பம்..!

18-ம் நூற்றாண்டுக்கு பின் முதல்முறை: 2023-24 இல் உலகின் அதிகபட்ச வெப்பம்..!

சுமார் ஒரு நூற்றாண்டு கழித்து தற்போது 2023-2024 அதிக வெப்பமான காலகட்டமாக பதிவாகியுள்ளது
இதற்கு முன்னர் 1890 – 1900 ஆகிய வருடங்களில் இடைப்பட்ட காலமே பூமியின் அதிக வெப்பமான வருடங்களாக பதிவானது
ஐரோப்பிய யூனியன், காலநிலை மாற்றம், வெப்பம் காலநிலை மாற்ற கண்காணிப்பு அமைப்பான காப்பர்னிக்கஸ் சர்வீஸ் [C2C] நடத்திய ஆய்வில் 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரையிலான காலகட்டம் மிகுந்த வெப்பம் நிறைந்த காலகட்டமாக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதம் அதிக வெப்பம் நிறைந்த மாதமாக உள்ளது.

இதற்கு முன்னர் 1850 – 1900 ஆகிய வருடங்களில் இடைப்பட்ட காலமே பூமியின் அதிக வெப்பமான வருடங்களாக பதிவான நிலையில் சுமார் ஒரு நூற்றாண்டு கழித்து தற்போது 2023-2024 அதிக வெப்பமான காலகட்டமாக பதிவாகியுள்ளது அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த வருடம் வரலாற்றில் உலகின் அதிக வெப்பநிலை கொண்ட வருடமாக பதிவாகும் என்றும் ஆய்வளார்கள் கணித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த வருடத்தின் வெப்பத்தை இந்த வருடம் முறியடித்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மனிதர்களின் செயலகளாலும், எல்- நினோ உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளாலும் இந்த அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது

எல் நினோ உள்ளிட்டவை இயற்கை நிகழ்வுகள் என்பதால அவற்றை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் மனிதர்களின் செயல்களாக நிலக்கரி எரிப்பு, எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றால் ஏற்படும் காலநிலை தாக்கங்களை கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் வரும் காலங்கள் மனித குலத்துக்கு சோதனை மிகுந்த காலமாக அமையும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

CATEGORIES
Share This