கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்கு உணவுப் பொருட்கள்!
மலையக பெருந்தோட்டங்களில் உள்ள 3,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவுப் பொருட்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நேற்று (06) இடம் பெற்ற கூடத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுமார் 1,500 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள 26,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள காலை உணவு வழங்கும் புதிய வேலைத்திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு ஊடாக இவை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES உலகம்