பல மாதங்களாக நீடிக்கும் உக்ரைன் – ரஷ்ய போர்: யுத்த களத்தில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள்

பல மாதங்களாக நீடிக்கும் உக்ரைன் – ரஷ்ய போர்: யுத்த களத்தில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தின் பாதுகாப்பு வலயத்தில் போரிடுவதற்காக இலங்கையிலிருந்து 476 பேர் ரஷ்யாவுக்குச் சென்றதாக விசாரணைப் பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தக் குழுவில் முன்னாள் இராணுவத்தினர் பலர் இருப்பதாக தெரியவந்துள்ளதாக விசாரணைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த குழுவிடமிருந்து இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் தலைமையில் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் பிரிவின் பணிப்பாளர் சமரகோன் பண்டா இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதேவேளை, ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கையில் இருந்து தூதுக்குழு அண்மையில் மொஸ்கோவிற்கு சென்றிருந்தது.

இந்த விசேட தூதுக்குழுவுக்கும் மற்றும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், ரஷ்ய படையில் இணைந்து போரிட்டு உயிரிழந்த இலங்கையர்களுக்கு இழப்பீடு வழங்க அந்நாட்டு அந்நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு உறுதியளித்துள்ளனர்.

CATEGORIES
Share This