சஞ்சய் மஹவத்த கைதின் பின்புலத்தில் அரசியல் தலையீடு: பியூமி ஹன்சமாலியை காப்பாற்றும் நடவடிக்கையா?

சஞ்சய் மஹவத்த கைதின் பின்புலத்தில் அரசியல் தலையீடு: பியூமி ஹன்சமாலியை காப்பாற்றும் நடவடிக்கையா?

சட்டவிரோதமாக சொத்துக்களை சேமித்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பியூமி ஹன்சமாலி மீது முறைப்பாடு செய்த சஞ்சய் மஹவத்த, பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட நிபுணர்களின் கவனம் திரும்பியுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தாக சஞ்சய் மஹவத்த, கைது செய்யப்பட்ட விதம், புலனாய்வுப் பிரிவினரை அனுப்பப்பட்ட விதம் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பதற்கான பின்னணியை தயாரித்த விதம் தொடர்பில் சட்ட நிபுணர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பியூமி ஹன்சமாலி மீது நேரடியான சட்ட நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது அவர் தொடர்பில் தகவல்களை சேகரித்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர், முறைப்பாடு அளித்த சஞ்சய் மஹவத்தவை கைதுசெய்யப்பட்டதன் பின்புலத்தில் அரசியல் காரணிகள் இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.

பியூமி ஹன்சமாலியின் பெயரில் உயர்மட்ட உயரதிகாரிகள் தமது கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பலத்த சந்தேகம் இருந்து வந்த நிலையில், தற்போதைய நடவடிக்கைகள் மேலும் சந்தேகத்தை றுதியாகியுள்ளதாகவும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This