அதிபர், ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்: கொழும்பில் பெரும் பதற்றம்

அதிபர், ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்: கொழும்பில் பெரும் பதற்றம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு கோட்டை பகுதி மற்றும் ஜனாதிபதி செயலக பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் பொலிஸாரின் தடைகளையும் மீறி ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்ந்தது.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கோட்டைக்கு முன்பாகவுள்ள வீதி முற்றிலும் தடை

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் அந்தப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட எட்டு பேர் இன்று (26) காலி வீதி, NSA சுற்றுவட்டம் மற்றும் கொழும்பில் பல வீதிகளில் பொதுமக்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, செராமிக் சந்தியில் இருந்து NSA சுற்றுவட்டம், NSA சுற்றுவட்டம் முதல் பாலதக்ஷ மாவத்தை வரையிலான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This