பேயாக நடித்த கணவன் – மனைவின் சட்டவிரோதக் காதலைக் கண்டு அதிர்ச்சி: மோதலில் ஆறுபேர் காயம் – 12 பேர் கைது
வெசாக் மற்றும் பொசன் போயா தினங்களில் கோரமான பேய் வீடுகளை காட்சிப்படுத்துவதைத் தடை செய்வது குறித்து புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஆண்டிலிருந்து கோரமான பேய் வீடுகளை காட்சிப்படுத்துவதைத் தடை செய்வதற்கு தேவையான சட்டங்களை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக துறைசார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
இம்முறை வெசாக் மற்றும் பொசன் போயா தினங்களில் நடைபெற்ற பேய் வீடுகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறான விடயங்களை தடை செய்யுமாறு அஸ்கிரி விஹாரையின் புத்தளம் மாவட்டத்தின் மிகேட்டுவத்தே சுமித்த தேரர் மூலம் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அண்மையில் எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
பொசன் போயா என்பது பேய் வீடுகளை காண்பிக்கும் ஒரு போயா என்ற எண்ணம் சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அதனை தடை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, அவற்றை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஆண்டிலிருந்து வெசாக் மற்றும் பொசன் போயா தினங்களில் நடைபெறும் கோரமான பேய் வீடுகளை காட்சிப்படுத்துவதை தடை செய்வது தொடர்பில் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.
இந்த விடயங்கள் மூலம் எதிர்கால சந்ததியினர் தவறான முன்னுதாரணத்தை வழங்குவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பேய் வீட்டில் குடும்ப தகராறு
இந்நிலையில், சட்டவிரோத உறவில் இருந்த தனது காதலனுடன் நவகமுவ பிரதேசத்தில் பேய் வீடு ஒன்றை பார்வையிட சென்ற இடத்தில் சவப்பபெட்டியில் சடலமாக நடித்த திருமணமான கணவர் அவரது மனைவியை அடையாளம் கண்டுள்ளார்.
இதனால் அந்த இடத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் கணவன் மூலம் 21 வயதுடைய மனைவியை தாக்க முற்பட்ட நிலையில் உருவான மோதலில் 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கடுவலை நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டது.
நவகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்களான 19 மற்றும் 24 வயதுடையவர்களே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த திருமணமான தம்பதிகள் சிறிது காலமாக பிரிந்துள்ள நிலையில் சட்ட ரீதியாக விவாகரத்து பெறவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், மோதலுடன் தொடர்புடைய இரு தரப்பிலும் 6 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.