மஹிந்தவின் பதவியை பறிக்க ரணில் திட்டமா?; ஆதரவளிக்க 43 பேர் தயார்
பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் எம்.பிகள் குழுவொன்று, அக்கட்சியின் தலைமை பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது.
தலைமைப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிடவைத்து இரகசியமாக ஆதரிக்கும் சில ஆலோசனைகள் நடத்தப்பட்டள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு ஆதரவளிக்க உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளின் எண்ணிக்கை 43 வரை இருக்குமெனவும் கூறப்படுகிறது.
இவர்களில் மூன்று அமைச்சர்கள், 13 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 27 எம்.பி.க்கள் உள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த விடயத்தை அறிந்துள்ள கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கியது யாரென விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.