சவூதி அரேபியாவில் துன்புறுத்தப்படும் பணிப்பெண்: கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு தகவல்

சவூதி அரேபியாவில் துன்புறுத்தப்படும் பணிப்பெண்: கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு தகவல்

சவூதி அரேபியாவில் வீட்டு பணிப்பெண்ணாக சேவைக்குச் சென்று அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, இரண்டு குழந்தைகளின் தாயான 33 வயதுடைய திஸ்னா ஷிரோமி அவரது மரணம் நெருங்கி வருவதாக தனக்கு நெருங்கியவர்களுக்கு அறிவித்துள்ளார்.

பொலன்னறுவை திம்புலாகல, இல. 38, மஹாஉல்பத, காஷ்யப்பபுரம் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு வருடத்திற்கு முன் சவூதி அரேபியாவில் சகா நகரில் தங்குமிடம் , உணவு , சம்பளம் , தண்ணீர் கூட இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கழித்து வரும் நாட்கள் தொடர்பிலும் இலங்கைக்கு அறியப்படுத்தியுள்ளார்.

சொந்த வீடு மற்றும் குழந்தைகளுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள பணம் சம்பாதிக்கும் நோக்கில் இரு பிள்ளைகளையும் தனது பெற்றோரிடம் விட்டு 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி குருணாகலை பிரதேசத்தில் முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக அந்தப் பெண் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

அவர் இலங்கைக்கு தெரிவித்துள்ள செய்தி பின்வருமாறு,

” என்னை இப்போது சுமார் மூன்று நான்கு நாட்களாக அறையொன்றினுள் உணவு , தண்ணீர் எதுவுமின்றி அடைத்து வைத்து சித்திரவதை செய்கின்றனர். இந்த வீட்டில் ஆறு பேர் செய்ய வேண்டிய வேலையை நான் மட்டும் தனியாக செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வேலைகளை செய்வது கடினம் என்பதால் தான் எனது கன்னத்தில் அறைந்து , அறையில் அடைத்து உணவு கூட வழங்காமல் சித்திரவதை செய்து வருகின்றனர்.

எனக்கு இந்த வீட்டு உரிமையாளர்கள் சம்பளம் எதுவும் வழங்கவில்லை. நான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். அதிகம் கூச்சலிட வேண்டாம் அடித்து சிறையில் அடைப்போம் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த வீட்டில் ஆண் பிள்ளை ஒருவன் இருக்கிறான். அந்தப் பிள்ளை அடிக்கடி என்னுடன் சண்டை போடுவான். பொலிஸில் முறைப்பாடு செய்தாலும் பயனில்லை.

இந்த வீட்டில் ஒருவர் பொலிஸில் பணி புரிகிறார். அந்த பொலிஸார் தான் மீண்டும் அதே வீட்டிற்கு சென்று பணி புரியுமாறு கூறினார். இலங்கைக்கு பெட்டி ஒன்றில் செல்ல விருப்பமா என அவர் என்னிடம் கேட்டார்.

எனக்கு இந்த வீட்டில் உள்ளவர்கள் சம்பளம் எதுவும் வழங்கவில்லை. அதன் பின்னர் முகவர் நிலையத்தில் முறைப்பாடு செய்து தான் ஒரு மாத சம்பளத்தை பெற்றேன். இப்போது சவூதி அரேபியாவில் சகா நகரில் உண்ண உணவு தண்ணீர் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளேன். இது தொடர்பில் அறியப்படுத்த எனக்கு யாரும் இல்லை.

நான்கு ஆண்களும், இரு பெண்களும் அனைத்து வேலைகளையும் நான் செய்ய வேண்டிய நிலை எனக்கு. அந்த வேலைகளை செய்ய முடியாமல் போனதால் தான் நான் இந்த வீட்டுக்காரர்கள் என்னை சித்திரவதை செய்கின்றனர்.

என்னுடைய கன்னத்திற்கும் தொலைபேசிக்கும் ஒரு தடவை தடியால் அடித்தனர். இப்போது எனது கன்னத்தில் ஒரு பக்கம் வீங்கியுள்ளது மருந்து கூட இல்லை.

நான்கு நாட்களாக இவ்வாறு எனக்கு உணவு இல்லை. என்னை முகவர் நிலையத்திலாவது விடச் சொன்னதன் பின்னர் வீட்டின் கேட்டை அடைத்து, அறையில் வைத்து, அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான அதிகாரிகளுக்கு அறியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This