விஜயதாசவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகுமா?: பெரமுனவின் கையில் முடிவு

விஜயதாசவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகுமா?: பெரமுனவின் கையில் முடிவு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளது.

அந்த கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் கொழும்பில் இன்று திங்கட்கிழமை (24.06.24) இடம்பெறவுள்ளது.

இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜயதாச ராஜபக்ச ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்று நாடளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

பொதுஜன பெரமுன கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் மற்றுமொரு அரசியல் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றால் தற்போதுள்ள கட்சி உறுப்புரிமையை விரைவில் இழக்க நேரிடும் என முன்னதாகவே பெரமுனவின் உறுப்பினர் கருத்து வெளியிட்டார்கள்.

விஜயதாச ராஜபக்ச பெரமுனவின் உறுப்பினராக இருந்துக் கொண்டு, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதால் அவர் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் விஜயதாசவின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவர் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.

விஜயதாச ராஜபக்சவிற்கு புதிய பதவியொன்று கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் மற்றுமொரு பதவியை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு நெருக்கடியை சந்தித்துள்ளார்.

CATEGORIES
Share This