இயற்கை பேரிடர்களும் காசாவை விட்டு வைக்கவில்லை: நீருக்காக போராடிய குழந்தைகளின் அழுகுரல் மரணப்படுக்கையில்
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீர்வின்றி தொடரும் நிலையில் காசாவில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
தெற்கு காசாவில் ஒன்பது வயது சிறுவன் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் என்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அந்த சிறுவனின் கைககள் மற்றும் கால்கள் தீக்குச்சிகளைப் போல, முழங்கால் மூட்டுகள் வீக்கமுற்று, மார்பு விலா எலும்பு தெரிகின்ற அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்.
தனது மகன் ஆரோக்கியமாக இருந்ததாகவும் போரினால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை மற்றும் நீரின்மையால் இவ்வாறான பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகவும் சிறுவனின் தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.
நீரின்மையால், நீரைப் பெற்றுக்கொள்வதற்கு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்கவேண்டியிருப்பதாக கிடைக்கின்ற நீரும் சுத்தமானவை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு குழந்தையும் மரணத்தை நெருங்கும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் சுத்தமான நீரின்மையே மகள் மரணப்படுக்கைக்கு வரக் காரணம் என்கிறார் அந்த குழந்தையின் தந்தை.
மேலும் அவர்களது வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளர். காசாவில் நீரைப் பெற்றுக்கொள்வதே அன்றாட போராட்டமாக உள்ளது.
காசா பகுதியில் தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் நோய்த்தொற்றுகளுக்கு மாசுபாடுடைய நீர் வழங்கப்படுகின்றமையே காரணம் என்பதொன்றும் இரகசியமல்லவென நாசர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுத் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீர் மற்றும் கழிவுநீர் வலையமைப்புகளை மீண்டும் நிறுவ மிகப்பெரிய சர்வதேச முயற்சி தேவை என நீர் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கான் யூனிஸில் 170 முதல் 200 கிமீ வரையிலான குழாய்களை மக்கள் இழந்துள்ளதாகவும் கிணறுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் சுமார் 200 வாகனங்கை கெரெம் ஷாலோம் கிராசிங் வழியாக ஒவ்வொரு நாளும் ஸ்டிரிப்க்குள் நுழைய அனுமதிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
மறுபுறம் தெற்கு காசாவில் உள்ள ரஃபாவைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து மோதல் இடம்பெறுவதாக உதவி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.