இந்தியாவின் பணக்கார நடிகர்கள் லிஸ்ட் : முதலிடத்தில் ஷாருக் ;விஜய், அஜித், ரஜினிக்கு எத்தனையாவது இடம்?
புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை, இந்தியாவின் டொப் 10 பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் அவர்களின் சொத்து மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது
ஷாருக்கான்
பொலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான், போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறார். சினிமா மட்டுமின்றி தொழில்களிலும் கொடிகெட்டிப்பறக்கும் இவர், ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.6 , 300 கோடி (இந்திய நாணயமதிப்பில்)
சல்மான் கான்
பொலிவுட்டில் மாஸ் நடிகராக வலம் வரும் சல்மான் கான் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். 60 வயதை நெருங்கி வரும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார். இவருக்கு (இந்திய நாணயமதிப்பில்) 2 ஆயிரத்து 900 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அக்ஷய் குமார்
முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அக்ஷய் குமார். பணக்கார நடிகர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றுள்ளார். ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நடிகர் அக்ஷய் குமாருக்கு 2 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.
ஆமீர்கான்
பணக்கார நடிகர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை நடிகர் ஆமீர் கான் பெற்றிருக்கிறார். பொலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவருக்கு ஆயிரத்து 892 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறதாம்.
விஜய்
முதல் நான்கு இடங்களும் பொலிவுட் நடிகர்களுக்கே கிடைத்த நிலையில், ஐந்தாம் இடத்தில் தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வரும் நடிகர் விஜய் உள்ளார். தற்போது அரசியலிலும் நுழைந்திருக்கும் விஜய், சினிமாவை விட்டு விலகவும் உள்ளார். இவருக்கு ரூ.474 கோடி சொத்துக்கள் உள்ளன.
ரஜினிகாந்த்
நடிகர் விஜய்யை தொடர்ந்து கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் தான் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறார். 70 வயதுக்கு மேலாகியும் சினிமாவில் செம்ம பிசியான நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.430 கோடி என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன்
டோலிவுட்டின் டிரெண்டிங் ஸ்டாராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தற்போது புஷ்பா 2 படத்தில் பிசியாக நடித்து வரும் அல்லு அர்ஜுன், பணக்கார நடிகர்கள் பட்டியலில் 7-ம் இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு ரூ.350 கோடி சொத்துக்கள் உள்ளதாம்.
பிரபாஸ்
நடிகர் பிரபாஸுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. பான் இந்தியா அளவில் மாஸ் நடிகராக வலம் வரும் பிரபாஸ், ரூ.241 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார்.
அஜித்குமார்
பிரபாஸுக்கு அடுத்தபடியாக 9வது இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்குமார். கோலிவுட்டில் மாஸ் நடிகராக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் 10வது இடத்தில் உள்ளார். தற்போது 60 வயதுக்கு மேலாகும் கமல், தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் இருக்குமாம்.